பாலா இயக்கும் இளமை பொங்கும் காதல் படத்தில் கீர்த்தி சுரேஷ்..!

 
பாலா மற்றும் கீர்த்தி சுரேஷ்
இயக்குநர் பாலா இயக்கவுள்ள புதிய படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் புதியதாக தயாரிக்கும் படத்தை பாலா இயக்கவுள்ளார். இந்த படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். வழக்கமான பாலா படமாக இல்லாமல், இளைய தலைமுறையை குறிவைத்து இப்படம் உருவாக்கப்படவுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படம் தொடர்பான முழுமையான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என தகவல்கள் கூறுகின்றன.

From Around the web