பொன்னியின் செல்வன் படத்தின் கீர்த்தி சுரேஷ்..? விளக்கம் கொடுத்த பிரபல நிறுவனம்..!

 
பொன்னியின் செல்வன் படத்தின் கீர்த்தி சுரேஷ்..? விளக்கம் கொடுத்த பிரபல நிறுவனம்..!

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக வெளியான ஆன்லைன் போஸ்டர் குறித்து பிரபல நிறுவனம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக்க உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி மற்றும் ஜெயம் ரவி மூவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

முன்னதாக இந்த படத்தில் த்ரிஷா நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்க சென்றதால், அந்த கதாபாத்திரத்திற்கு மாற்றாக அமைந்தார் த்ரிஷா. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாகவும், விக்ரமிற்கு உடன்பிறந்த தங்கையாகவும் த்ரிஷா நடிக்கிறார்.


இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் வரலாற்றுப் பாணி உடை அணிந்து ” பொன்னியின் செல்வன்” என்ற போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலாக தொடங்கியது. இதில் அவர் குந்தவை கதாபாத்திரத்தில் படத்தில் நடிப்பதாகவும் எழுத்துக்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த போஸ்டர் வைரலாக சமூகவலைதளங்களில் வெளியானதை அடுத்து, போஸ்டர் வெளியிட்ட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட போஸ்டர். பொன்னியின் செல்வன் படத்திற்கும் இந்த போஸ்டருக்கும் சம்மந்தமில்லை என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. 

From Around the web