மூன்றாவது முறையாக விஜய்யுடன் ஜோடி சேருகிறார் கீர்த்தி சுரேஷ்..!

 
விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ்

பைரவா, சர்கார் படங்களுக்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் ந்டித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு டிசம்பரில் துவங்கப்படுகிறது. மேலும் படம் 2022 ஏப்ரல் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

அதை தொடர்ந்து விஜய் நடிக்கும் அவருடைய 66-வது படத்தை தெலுங்கு சினிமா இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. எனினும், படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கவுள்ளார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் தளபதி 66 படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

படத்துக்கு தமன் இசையமைக்கிறார், மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். இந்த தகவல்கள் மட்டுமே உறுதியாகியுள்ளன. விரைவில் விஜய் 66 படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆன்போர்டு என்கிற அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தமிழில் ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக் காயிதம்’, மலையாளத்தில் மோகனால் உடன் ‘மரக்காயர்: அரப்பிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி பாட்டா’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

From Around the web