மீண்டும் விஜய்க்கு ஜோடியாகம் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..?

 
விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ்

நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ‘தளபதி 65’ படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். கொரோனா காரணமாக இதனுடைய ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் படப்பிடிப்பு துவங்கும். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜ ஹெக்டே நடிக்கவுள்ளார். 

இதை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்கு பட இயக்குநர் வம்சி பைடி பல்லி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக்கிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘தோழா’ படத்தை வம்சி பைடி பல்லி இயக்கி இருந்தார். அதை தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் அவர் கால் பதிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பைரவா, சர்கார் போன்ற படங்களில் விஜய் - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளனர். ஒருவேளை இந்த படம் உறுதியாகும் பட்சத்தில் அவர்கள் நடிக்கும் மூன்றாவது படமாக இது அமையும். 
 

From Around the web