சிரஞ்சீவிக்கு ராக்கி கட்டினார் கீர்த்தி சுரேஷ்- வேதாளம் ரீமேக் உறுதியானது..!

 
சிரஞ்சீவி மற்றும் கீர்த்தி சுரேஷ்

நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளில் கீர்த்தி சுரேஷுடன் அவர் நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் குமார், லக்ஷ்மி மேனன், ஸ்ருதி ஹாசன், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘வேதாளம்’. இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

தமிழில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். அவருக்கு தங்கையாக லக்ஷ்மி மேனன் நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘போலா ஷங்கர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மெஹர் ரமேஷ் இயக்குகிறார்.

முன்னதாக சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சாய் பல்லவியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அதற்கிடையில் கீர்த்தி சுரேஷிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ரூ. 3 கோடி அவர் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது.

தங்கையாக நடிப்பதற்கு ரூ. 3 கோடி மிகவும் அதிகம் என்று கருதிய சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷை வேண்டாம் என்று கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் சாய் பல்லவி தங்கையாக நடிக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் முடிவில் போலோ சங்கர் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பது படத்தின் முதல் பார்வை போஸ்டர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்கி, இந்தாண்டு இறுதியில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
 

From Around the web