இவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷின் காதலரா..?? வெளியான புகைப்படம்..!!

நடிகை கீர்த்தி சுரேஷின் ஒரு ஆண் நண்பருடன் நட்புடன் இருக்கும் புகைப்படம் வெளியானதை அடுத்து, அவர் தான் கீர்த்தி சுரேஷின் காதலர் என்கிற தகவல் கோலிவுட் சினிமாவில் வைரலாக பரவி வருகிறது.
 
 
keerthy suresh


தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு நீண்ட கால காதலர் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் உலா வருகின்றனர். அவரும் கீர்த்தி சுரேஷும் பள்ளிக் காலம் முதலே காதலித்து வருகின்றனர் எனவும், இருவரது பெற்றோர்களுக்கும் இதில் சம்மதம் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் இதுநாள் வரை அந்த கிசுகிசுக்கப்படும் காதலர் யாரென்று யாருக்கும் தெரியாது. கீர்த்தி சுரேஷ் நெருங்கிய வட்டாரங்களுக்கு மட்டுமே அந்த உண்மை தெரியும். இன்னும் சில ஆண்டுகளில் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், ஒரு ஆண் நபருடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர் தான் கீர்த்தி சுரேஷின் நீண்ட நாள் காதலர் என்கிற தகவல் தீயாக பரவி வருகின்றன. இதுகுறித்து உண்மையான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

keerthy suresh boy friend

கீர்த்தி சுரேஷ் உடன் இருப்பவர் பிரபல தொழிலதிபரான ஃபர்ஹான். கேரளாவைச் சேர்ந்த இவர், கீர்த்தி சுரேஷின் நெருங்கிய நட்பு வட்டத்தில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறார். ஆனால் அவர் தான் காதலரா ? இல்லையா? என்பதை கீர்த்தி சுரேஷ் தான் விளக்க வேண்டும். 

From Around the web