ஹொம்பாலே ஃப்லிம்ஸ், சுதா கொங்குராவை அலைய விடும் கீர்த்தி சுரேஷ்..!!
நடிகையர் திலகம் படத்துக்கு கீர்த்தி சுரேஷ் தேசிய விருதை வாங்கியதும் தான் வாங்கினார், அத்துடன் அவருடைய சினிமா வாழ்க்கை சரிந்துவிட்டதாகவே தெரிகிறது. அதை தொடர்ந்து அவர் நடித்த எல்லா படங்களும் படு தோல்வி தான்
நானியுடன் தெலுங்கில் நடித்துள்ள ‘தசரா’ படத்தை அவர் பெரிதும் நம்பியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தசரா வரும் வெள்ளி அன்று திரைக்கு வருகிறது. இதற்கான ப்ரோமோஷன் பணிகள் வேகம் எடுத்துள்ளன.
இந்நிலையில் தெலுங்கில் போலோ சங்கர், தமிழில் மாமன்னன் உட்பட 4 படங்களை அவர் கமிட் செய்துள்ளார். இதில் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக ரகு தாத்தா படத்தை கர்நாடகாவைச் சேர்ந்த ஹொம்பாலே நிறுவனம் தயாரித்து வருகிறது.

கே.ஜி.எஃப் இரண்டு பாகங்கள், காந்தாரா போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் தான் ஹொம்பாலே. அதன்காரணமாகவே கீர்த்தி ஷெட்டி நடிக்கும் ரகு தாத்தா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தை சுனில் என்பவர் இயக்குகிறார், சுதா கொங்கரா படத்திற்கான நிர்வாக தயாரிப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
படப்பிடிப்பின் போது இயக்குநர் சுனில் மற்றும் கீர்த்தி சுரேஷுக்கு இடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது எதையும் பேசாமல் இருந்துவிட்டு, இரண்டாவது கட்ட படப்பிடிப்புக்கு கால்ஷீட் கேட்கையில் கீர்த்தி மதிக்கவில்லையாம். ஹொம்பாலே நிறுவனம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் இல்லையாம்.

மேலும் சுதா கொங்குராவும் கீர்த்தி ஷெட்டியிடம் பேசியுள்ளார். ஆனால் அவர் முன்பு சரி என்று சொல்லிவிட்டு, தயாரிப்பு நிறுவனம் வந்து கேட்டால் இழுத்தடிக்கிறாராம். இதனால் ரகு தாத்தா படப்பிடிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்த ஹெம்பாலே நிறுவனத்துக்கு, ரகு தாத்தா தான் முதல் தோல்விப் படமாக இருக்கும் என்கிற கருத்து கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
 - cini express.jpg)