சினிமாவில் கால்பதிக்கும் கீர்த்தி சுரேஷின் சகோதிரி..!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் உடன்பிறந்த மூத்த சகோதிரி விரைவில் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
 
keerthy suresh

பிரபல நடிகை மேனகா மற்றும் மலையாள திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் தம்பதியின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக உள்ளார்.

இவருடைய குடும்பத்தினர் மட்டுமில்லாமல், கீர்த்தி சுரேஷின் பாட்டியும் கடைக்குட்டி சிங்கம், தாதா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்த வரிசையில் கீர்த்தி சுரேஷின் அக்காவும் சினிமா துறையில் கால்பதிக்கிறார். 

கீர்த்தி சுரேஷின் மூத்த சகோதிரி ரேவதி சுரேஷ் இயக்குநர் ப்ரியதர்ஷனிடம் துணை இயக்குநராக பணியாற்றி வருகிறார். அவர் தற்போது ’தேங்க்யூ’ என்கிற பெயரில் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். அதற்கான முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதை கீர்த்தி சுரேஷ் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, சகோதிரி ரேவதி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

From Around the web