‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்..! 

 
1

 ஜவான் திரைப்படத்தின் மகத்தான வெற்றியால் பாலிவுட்டில் அட்லீ தற்போது தெறி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், இன்று இப்படத்திற்கான பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இந்த பூஜையில் அட்லீ, பிரியா அட்லீ, வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி மற்றும் தயாரிப்பாளர் முராத் கேதனி ஆகியோர் கலந்து கொண்டனர்.

1

இந்தியில் ரீமேக்காக உள்ள தெறி ரீமேக்கிற்கு அட்லீ தான் தயாரிப்பாளர் இவரது தயாரிப்பில் ஏற்கனவே சங்கிலி புங்கிலி கதவத் தொற, அந்தகாரம் போன்ற படங்கள் வெளியாகி ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றன. விஜய் நடிப்பில் 2016ம் ஆண்டு வெளியான தெறி படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருப்பது மட்டுமின்றி, அவருடைய கெத்து மிகவும் அழகாக காட்டப்பட்டிருக்கும். அதேபோல, வில்லனாக நடித்த இயக்குநர் மகேந்திரன் படத்தை மேலும் சிறப்பாக கொண்டு சென்றார். இவர்களின் காம்போ இன்றுவரை ரசிர்கள் மனதில் மறையாமல் நின்றுள்ளது.


 

From Around the web