வடசென்னை கதையில் கென் கருணாஸ்..!

 
வெற்றிமாறன் மற்றும் கென் கருணாஸ்
அசுரன் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் உருவாகும் புதிய படைப்பில் கென் கருணாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது தெரியவந்துள்ளது.

வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யா நடிக்கும்  வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நவம்பரில் துவங்குகின்றன. வெறும் 3 மாதங்களில் இந்த படத்தை முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

அதை தொடர்ந்து பிரபல ஓடிடி தளத்திற்காக வெப் சிரீஸ் ஒன்றை தயாரிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘ராஜன் வகையறா’ என்கிற பெயரில் இந்த சிரீஸ் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளது.

வடசென்னை படத்தில் ஆமிர் நடித்த ராஜன் கதாபாத்திரத்தின் 15 வயது முதல் 24 வயது வரையிலான காலக்கட்டத்தை மையப்படுத்தி இந்த சீரிஸ் உருவாகிறது. இதில் இளம் ராஜனாக கென் கருணாஸ் நடிக்கிறார்.

இதற்காக கென் கருணாஸுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிரீஸ் குறித்த அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாகவுள்ளது. அப்போது மற்ற நடிக்கர்கள் மற்றும் தயாரிப்புக் குழு பற்றி தெரிய வரும்.

From Around the web