பாலா படத்தில் தாக்கப்பட்ட துணை நடிகை- போலீசில் புகார்..!!

பாலா இயக்கத்தில் தயாராகி வரும் வணங்கான் படத்தில் நடித்த போது கேரளாவைச் சேர்ந்த துணை நடிகை தாக்கப்பட்டதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
vanangaan

வர்மா படத்தை தொடர்ந்து பாலா இயக்கி வரும் படம் வணங்கான். முன்னதாக இந்த படத்தில் நடிப்பதற்கு சூர்யா, கீர்த்தி ஷெட்டி கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தனர். ஆனால் கதையில் ஏற்படுத்தப்பட்ட சில மாற்றங்கள் காரணமாக வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார்.

அதேபோல நடிகை கீர்த்தி ஷெட்டியும் படத்தில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து வணங்கான் படம் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. கதாநாயகியாக ரோஷினி பிரகா‌ஷ் என்பவர் நடித்து வருகிறார். வணங்கான் படப்பிடிப்பு பணிகள் கன்னியாகுமரியில் நடந்து வருகின்றன.

இதில் கேராளவைச் சேர்ந்த ஏராளமான துணை நடிகர்கள் நடித்து வருகின்றனர், அவர்களுக்கு ஏஜெண்டாக செயல்பட்டு வருபவர் ஜிதின். அவ்வாறு இந்த படத்தில் நடிக்க ஜிதினால் வரவழைக்கப்பட்டவர் தான் துணை நடிகை லிண்டா. இவருக்கு 3 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டதற்கான ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து ஜிதினிடம் கேட்டபோது, லிண்டாவை தரக்குறைவாக பேசி, பலமாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த லிண்டா கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஜிதின் மீது அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

From Around the web