கெட்டி மேளம்... கெட்டி மேளம்... விரைவில் அமீர் - பாவனி திருமணம்..! எப்போ தெரியுமா ?

 
1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர் அமீரும், பாவனியும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமயத்தில் சர்ச்சைகளுக்கு, பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வலம் வந்தார் பாவனி. பிக்பாஸில் இறுதிவரை பயணித்த இவர் மூன்றாம் இடத்தையும் பிடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அமீர், பாவனி இருவரும் ஜாலியாக ஒன்றாக ஊர் சுற்றினார்கள். இவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகின. ஆரம்பத்தில் அமீர் ஒருதலையாக பவானியை காதலித்து வந்த நிலையில், தற்போது இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் இணையத்தில் அவ்வப்போது செய்திகள் பரவி வருகிறது.

தொடர்ந்து இருவரும் காதலித்து வந்த நிலையில், 2 வருடங்களாக லிவ்விங் டு கெதராக வாழ்ந்து வந்தனர். தொடர்ந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து துணிவு படத்தில் நடித்து அசத்தியிருப்பர். இவர்களின் திருமண அப்டேட் கேட்டு ரசிகர்கள் நச்சரித்து வந்த நிலையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இவர்கள். வரும் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொள்ளபோவதாக அறிவித்துள்ளனர். இதை அறிந்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
 

From Around the web