விரைவில் உருவாகும் கே.ஜி.எஃப்- 3: சூசகமான அறிவிப்பு..!!

தொடர்ந்து வெற்றிப் படங்களை தயாரித்து வரும் ஹொம்பாலே ஃப்லிம்ப்ஸ் நிறுவனம், விரைவில் கே.ஜி.எஃப் மூன்றாம் பாகம் தயாராகும் என்கிற அறிவிப்பை சூசகமாக வெளியிட்டுள்ளது.
 
KGF

கன்னடத்தில் 2018-ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனுடைய இரண்டாவது பாகம் கே.ஜி.எஃப் 2, ஏப்ரல் 14, 2022 அன்று வெளியானது. இந்த படம் முதல் பாகத்தை விடவும் மெஹா ஹிட் வெற்றியை பதிவு செய்தது.

இந்தியில் மட்டும் இந்த படம் ரூ. 500 கோடிக்கும் மேலாக வசூலித்தது. இதுவரை கன்னட சினிமாவில் எந்த படமும் அடைய முடியாத வசூல் சாதனை இப்படம் படைத்தது. பல்வேறு பாலிவுட் படங்களுக்கே சவால் விடும் வகையில் கே.ஜி.எஃப் 2 அசுரத்தனமான வெற்றி அடைந்தது.

கேஜிஎஃப் 2 படத்தில், அடுத்த பாகத்துக்கான தகவல் இடம்பெற்றிருந்தது. இதனால் விரைவில் கே.ஜி.எஃப் 3 வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இன்றுடன் கேஜிஎஃப் 2 வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக ஹொம்பாலே பிலிம்ப்ஸ் நிறுவனம் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.


அதில் கே.ஜி.எஃப் மூன்றாம் பாகத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கேஜிஎஃப் படம் காவியமான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த படத்தின் கதாபாத்திரங்கள் என்றும் ரசிகர்களின் நினைவை விட்டு நீங்காது என்கிற கேப்ஷனை ஹொம்பாலே பிலிம்ப்ஸ் பதிவு செய்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 

From Around the web