கங்குவா படத்துக்குள் வந்த கே.ஜி.எஃப் பிரபலம்- யாரு தெரியுமா..?

ஃபேண்டசியான கதையமைப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை வெளியான சிவா படங்களை விடவும், இது மிகவும் மாறுபட்டதாக இருக்கும்.
 
kanguva

விறுவிறுப்பாக நடந்து வரும் கங்குவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த அவினாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் சித்தி மகனான கே.இ. ஞானவேல்ராஜா தனது க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் வாயிலாக தயாரித்து வரும் ‘கங்குவா’. சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நடந்தது.

நிகழ்கால வாழ்க்கை மற்றும் கடந்த கால வாழ்க்கை என இரண்டு வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் ஃபேண்டசி கதைக்களத்தில் கங்குவா படம் தயாராகி வருகிறது. இதில் சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார்.

KGF villain

இந்த ஒரு படத்தில் மட்டும் அவர் பத்துக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இதுவரை கோவா, சென்னையின் எண்ணூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

தற்போது படப்பிடிப்பு சென்னையில் இருக்கும் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது. விரைவில் கொடைக்கானலில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த படத்தில் சரித்திரக் கால பின்னணிக்கான பகுதியில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவினாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

From Around the web