ஸ்ருதி ஹாசன் தொல்லை தாங்காமல் ஓடி ஒளியும் கே.ஜி.எஃப் பட இயக்குநர்..!

 
ஸ்ருதிஹாசன்

சலார் பட படப்பிடிப்பில் இயக்குநர் பிரசாந்த் நீலுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் தொல்லை கொடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக வருகிறது.

கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கி வரும் படம் ‘சலார்’.பிரபாஸ், ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் படத்திற்கான பேட்ச் அப் பணிகளும் உடன் நடந்து வருகின்றன.


இந்நிலையில் இயக்குநர் பிரசாந்த் நீல் உடன் குறும்பாக ஸ்ருதி ஹாசன் எடுத்துக் கொண்ட வீடியோவை சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அவரை எப்போதும் நான் இப்படி தான் தொந்தரவு செய்வேன் என்று வீடியோவில் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

முழுக்க ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகி வரும் சலார் படம் வரும் 2022-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இதற்கான படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கில் நேரடியாக வெளியாகும் இப்படம் அனைத்து தென்னிந்திய மொழிகள் உட்பட இந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
 

From Around the web