கே.ஜி.எஃப்- 2 ரிலீஸ் விவகாரம்- ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த படக்குழு..!

 
யாஷ்

கொரோனா இரண்டாவது அலை காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு யாஷ் நடிப்பில் கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் தமிழில் வெளியான ‘கே.ஜி.எஃப்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து தயாரான இதனுடைய இரண்டாம் பாகம் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியது.

இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர்களுடன் சஞ்சய் சத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ் போன்ற இந்தியளவில் பிரபலமான பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஒரே சமயத்தில் 5 மொழிகளில் தயாராகிறது.

வரும் ஜூலை 16-ம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. அதற்கேற்றவாறு படப்பிடிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன. தற்போது கே.ஜி.எஃப் 2-ம் பாகத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கே.ஜி.எஃப் 2 படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டப்படி ஜூலை மாதம் இந்த படம் வெளியாகாது என கூறப்படுகிறது. அதனால் புதிய தேதியை முடிவு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. 
 

From Around the web