கே.ஜி.எஃப் 2 டீசர் மாபெரும் சாதனை..!

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘கே.ஜி.எஃப்’- 2 படத்தின் டீசர் யூ-ட்யூபில் சுமார் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது வரலாற்று சாதனையாக அமைந்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி திரைப்படம் கே.ஜி.எஃப். இதனுடைய இரண்டாவது பாகத்தையும் அவர் தான் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக யஷ் நடித்துள்ளார்.

முன்னதாக இந்த படம் ஜூலை 16-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. கொரோனா காரணமாக வெளியாகவில்லை. முன்னதாக வெளியனா படத்தின் டிசிஅருக்கு மக்களிடம் மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் இப்பட டீசரை சுமார் 200 மில்லியன் பார்வையாளர்கள் கடந்துள்ளது. கேஜிஎஃப் 2 திரைப்படத்தில் யஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் வெளியான 16 மணிநேரத்தில் புதிய சாதனையை படைத்தது. அதன்படி விஜய்யின் மாஸ்டர், ஆர்.ஆர்.ஆர், சர்கார், மெர்சல் படங்களின் முதல்நாள் லைக்குகளை எல்லாம் இது முந்திவிட்டது. இந்த டீசர் தற்போது மூன்று மில்லியன் லைக்குகளை குவித்துள்ளது.

அதோடு, ‘கேஜிஎஃப் 2’ டீசர் வெளியான முதல் நாளில் 3 மில்லியன் லைக்குகளை குவித்த முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது. உலகில் இதுவரை வெளியான படங்களில் 8 மில்லியன் லைக்ஸ்களைக் குவித்த முதல் டீசர் என்ற பெருமை ’கேஜிஎஃப் 2’ படத்திற்கு கிடைத்துள்ளது.

From Around the web