பேச்சுவார்த்தையில் இருக்கிறோம் - கேஜிஎஃப் – 3 சரியான நேரத்தில் வரும் : யஷ்!

 
1

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான படங்கள் ‘கே.ஜி.எஃப்’ மற்றும் ‘கே.ஜி.எஃப் 2’. இரண்டு படங்களுக்குமே மாபெரும் வரவேற்பினைப் பெற்றவை. குறிப்பாக ‘கே.ஜி.எஃப் 2’ அனைத்து மொழிகளிலும் வசூலைக் குவித்தது. அப்படத்தின் கதையும் 3-ம் பாகத்துக்கு தொடக்கமாகவே முடித்திருந்தார் பிரசாந்த் நீல்.
இதனால் ‘கே.ஜி.எஃப் 3’ எப்போது என்ற கேள்வியை பலரும் எழுப்பி வந்தார்கள். அதற்கு ஹாலிவுட் இணையத்துக்கு அளித்த பேட்டியொன்றில் பதிலளித்துள்ளார் யஷ்.

அந்தக் கேள்வியை யஷிடம் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக யஷ், “இப்போது நடித்து வரும் இரண்டு படங்களுக்குப் பிறகு ’கே.ஜி.எஃப் 3’ கண்டிப்பாக நடைபெறும். அதற்கான ஐடியா இருக்கிறது. அது குறித்து பேசி வருகிறோம். அது சரியான நேரம் வரும் போது கண்டிப்பாக நடைபெறும். அப்படத்தினை வைத்து பணமாக்க விரும்பவில்லை. ஏற்கனவே மக்கள் நிறைய கொடுத்துவிட்டார்கள். அவர்கள் பெருமைப்படும் வகையில் ‘கே.ஜி.எஃப் 3’ இருக்கும். நிறைய கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என பலரும் அப்படம் குறித்து கேட்கிறார்கள். அந்தளவுக்கு அனைவருக்கும் ராக்கி பாய் கதாபாத்திரம் பிடித்திருக்கிறது” என்று யஷ் தெரிவித்துள்ளார்.

யஷ். தற்போது, மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார். கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட் பட்ஜெட்டில் உருவாகிறது. நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் யஷ், “டாக்ஸிக் படத்தைத் தொடர்ந்து ராமாயணா படத்தில் ராவணனாக நடிக்கிறேன். அதில், இணை தயாரிப்பாளராகவும் இணைந்துள்ளேன். ராவணன் கதாபாத்திரம் குறித்த நிறைய விஷயங்களை அறிந்துகொண்டேன். இதுசார்ந்த விஎஃப்எக்ஸ் பேச்சுவார்த்தைகளிலும் இருந்திருக்கிறேன். இது, சர்வதேச திரைப்படமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

From Around the web