குஷ்பு, பிருந்தா மாஸ்டருடன் கோ-ஜட்ஜாக இணைந்த ஞானசம்மந்தம்..!

 
பிருந்தா மற்றும் குஷ்பு
பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் நடிகருமான ஞானசம்மந்தம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூடுதல் நடுவராக இணைந்துள்ளார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி டான்ஸ் Vs டான்ஸ். இதனுடைய இரண்டாவது சீசன் விரைவில் துவங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு ஏற்கனவே பிருந்தா மாஸ்டர் மற்றும் குஷ்பு இருவரும் நடுவர்களாக உள்ளனர்.

இவர்களுடன் கூடுதல் நடுவராக நட்சத்திர பேச்சாளரும் நடிகருமான ஞானசம்மந்தம் இடம்பெறவுள்ளார். இவருடைய பங்களிப்பு என்பது நிகழ்ச்சியில் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.

ஆனால் தமிழ் இலக்கியங்களை தொடர்புப்படுத்தி போட்டியாளர்களின் நடனத்தை இவர் மதிப்பீடு செய்வார் என்று மட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டான்ஸ் Vs டான்ஸ் நிகழ்ச்சிக்கான புதிய ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
 

From Around the web