திருமணம் செய்ய விரும்பிய ரசிகருக்கு குஷ்புவின் கல... கல... பதில்..!

 
திரைப்பட நடிகை குஷ்பு

உடல் மெலிந்து காணப்படும் குஷ்புவை திருமணஞ் செய்ய விருப்பம் தெரிவித்து ரசிகர் ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

விரைவில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நடன நிகழ்ச்சியில் நடுவராக வரவுள்ளார் குஷ்பு. அதற்கான ப்ரோமோ ஷூட் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் 90-களின் சினிமா ரசிகர்களை ஆச்சரியமடையச் செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் 90-களின் மத்தியில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் குஷ்பு. அப்போதும் சரி, இப்போதும் சரி தன்னுடைய நடிப்பு, குரலை, படங்களை தாண்டி உடல் தோற்றத்தால் பிரபலமானவர் குஷ்பு. கொஞ்சம் எடை கூடிய உடலை வைத்து தமிழ் சினிமாவை 7 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார் குஷ்பு.

தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சியை திருமணம் செய்துகொண்டார். இரண்டு பெண் குழந்தைகள் அவருக்கு. எனினும் கூடிய உடல் எடையை குஷ்பு எப்போதும் குறைக்க முயன்றதில்லை. இது அவருடைய தனித்துவமாகவும் மாறியது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் குஷ்பு நடுவராக பங்கேற்கிறார். அதற்கான வெளியான புகைப்படங்களில் குஷ்பு மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். இதை பார்க்கும் ரசிகர்கள் ஆச்சரியம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இவருடைய புதிய தோற்றம் சமூகவலைதளங்களில் வைரலானது. அதை பார்த்த ரசிகர் ஒருவர் குஷ்புவை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார். அதற்கு குஷ்பு அளித்துள்ள பதில் சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது. 

நீங்க ஒரு 21 வருஷம் லேட்டா வந்து இப்படியொரு கேள்வி கேட்டிருக்கீங்க. ஆனாலும், கவலைப்படாதீங்க என் கணவரிடம் ஒரு வார்த்தை இதைப் பற்றி பேசி விட்டு சொல்கிறேன்” என நடிகை குஷ்பு பதிலளித்துள்ளது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

From Around the web