ஓடிடியில் குஷி படம் அக்டோபர் 6 ரிலீஸ் இல்லை...ஆனால்...  

 
1

கடந்த செப்டம்பர் 1-ந் தேதி திரைக்கு வந்த படம் குஷி. சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்த இப்படத்திற்கு காதலர்கள் மத்தியில் செம வரவேற்பு இருந்தது.

தெலுங்கில் உருவான இப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர்…வெளியான முதல் வாரத்தில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் ஒரே வாரத்தில் ரூ.70 கோடி வசூலை குவித்தது…

முதல் வாரம் ரூ.70 கோடி வசூலித்த இப்படம் இரண்டாம் வாரத்தில் வெறும் 10 கோடி மட்டுமே வசூலித்தது. இதனால் தெலுங்கில் இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இருந்தாலும் படம் ஓரளவு லாபத்தை எடுத்து தப்பித்தது.

தெலுங்கில் குஷி படம் நஷ்டத்தை சந்தித்தாலும் தமிழ் நாட்டில் இப்படம் நன்கு வசூலித்தது இப்படம் ரூ.10 கோடி வரை தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்து நன்கு லாபத்தை கொடுத்துள்ளது அதேபோல் இப்படத்தை வெளிநாட்டில் வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு நன்கு லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குஷி திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதியே ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது..இதனால் தியேட்டரில் மிஸ் செய்தவர்களுக்கு விருந்து என சொல்லப்பட்டு வருகிறது..


 

From Around the web