தளபதி 66 படம் மூலம் தமிழில் கால்பதிக்கும் கியாரா அத்வானி..!

 
கியாரா அத்வானி

விஜய் நடிப்பில் அடுத்து உருவாகும் தளபதி 66 படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளார் கியாரா அத்வானி. லாரன்ஸ் இயக்கத்தில் ‘லக்ஷ்மி பாம்’ படத்தில் அவர் நடித்ததை அடுத்து தொடர்ந்து அவர் தென்னிந்திய மொழிகளில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே ‘பரத் எனும் நான்’ என்கிற படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கியாரா நடித்துள்ளார். அந்த படத்தை தொடர்ந்து ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் புதிய படத்திலும் இவர் தான் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படங்களை தொடர்ந்து தளபதி 66 படத்தில் அவரை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வம்சி படிப்பள்ளி இயக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளை தொடர்ந்து ஹிந்தியிலும் வெளிவரவுள்ளது. அதனால் பாலிவுட் சந்தையை கைபற்ற கியாரா அத்வானி நல்லவாய்ப்பை ஏற்படுத்துவார் என படக்குழு எண்ணுகிறது.
 

From Around the web