கடத்தல்காரன் ஹீரோ; கொள்ளையை தடுக்கும் போலீஸ் வில்லனா..? புஷ்பா அப்டேட்..!

 
அல்லு அர்ஜுன் மற்றும் ஃபகத் பாசில்

அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா படத்தில் ஃபகத் பாசில் நடித்து வரும் கதாபாத்திரத்திற்கான கெட்-அப் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

செம்மரக் கடத்தல் சம்பவத்தை கதைக்களமாக வைத்து தெலுங்கில் உருவாகி வரும் புஷ்பா. இதில் ஹீரோவாக நடிக்கும் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


இந்த படத்தில் மலையாள நடிகர் ஃபகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய கெட்-அப் போஸ்டர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி இன்று வெளியாகியுள்ள  கடத்தல்காரர்களை பிடிக்கும் போலீஸ் வேடத்தில் அவர் நடிப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் அவர் தான் படத்தின் வில்லன் என படக்குழு தெரிவித்துள்ளது.

செம்மரக் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் திருப்பதி வனப்பகுதிகளில் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில மற்றும் மத்திய அரசுகள் முயன்று வருகின்றன. எனினும், இந்த சம்பவம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் புஷ்பா படத்தில் கடத்தலில் ஈடுபடும் கொள்ளையனை ஹீரோ என்பதும், குற்ற நடவடிக்கையை தடுக்கும் அதிகாரியை வில்லன் என்று புஷ்பா படக்குழு குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

From Around the web