”உடன்பிறந்தவன் கொடுத்த விஷத்தால் சிறுநீரகம் போச்சு” பொன்னம்பலம்..!!
 

நடிகர் பொன்னம்பலத்துக்கு சிறுநீரகப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும் சிறுநீரகப் பிரச்னைக்கு சொந்த சகோதரன் தான் காரணம் என வீடியோ வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

தமிழ் சினிமாவின் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். இவருக்கு அண்மையில் சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டுள்ளதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் 90-களின் மத்தியில் வில்லன் வேடத்தில் கொடிகட்டிப் பிறந்தவர் பொன்னம்பலம். நகைச்சுவைப் கதாபாத்திரம், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிப்பி என எல்லாவற்றிலும் புகுந்து விளையாடுவார். சமீபமாக  அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால், பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கெடுத்தார்.

ponnambalam

அதற்கு பிறகும் அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தன. திடீரென்று மீடியா முன்பு தோன்றிய அவர், சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வருவதாகவும், தனக்கு சிகிச்சைக்கு பணம் வழங்க உதவி கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அவருக்கு பல்வேறு உதவிகள் கிடைத்தன. மேலும் தனது அக்கா மகன் சிறுநீரக தானம் வழங்கியுள்ளதை அடுத்து, தற்போது நலமுடன் உள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், தனது சொந்த சகோதரனால் ஸ்லோ பாய்சன் கொடுத்து சிறுநீரகம் செயலிழந்ததாக வீடியோ வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

From Around the web