கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் படம்- எப்படி இருக்கு..??

லியானார்டோ டி கேப்ரியா இயக்கத்தில் மார்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’ திரைப்படம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
leonardo dicaprio

ஹாலிவுட் சினிமாவில் கொண்டாடப்படும் இயக்குநர்களில் ஒருவர் மார்டின் ஸ்கார்செஸி. இவருடைய இயக்கத்தில் வெளியான தி ஏவியேட்டர், தி டிபார்டட், ஷட்டர் ஐலேண்டு, ஹியூகோ, தி வுல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட் போன்ற படங்களை இயக்கி உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். 

குறிப்பாக இவர் லியோனார்டோ டி காப்ரியாவுடன் சேர்ந்து 5 படங்களில் பணியாற்றியுள்ளார். இந்த 5 படங்களுமே உலகளவிலான ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்த கூட்டணி 5-வது முறையாக இணைந்துள்ள படம் தான் கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர். 

அமெரிக்காவில் 1920-களில் ஓசேஜ் நேஷன் என்ற பகுதியில் இருந்த எண்ணெய் வளத்துக்காக அமெரிக்கர்கள், அங்கு வசித்து வந்த பழங்குடியின மக்களை தொடர்ந்து கொலை செய்து அழித்தனர். இந்த சம்பவத்தை குறித்து பதிவு செய்துள்ள படம் தான் ‘கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்’.

இந்த படம் கடந்த 6-ம் தேதி ஆப்பிள் டிவியில் கடந்த வாரம் வெளியானது. ரசிகர்களிடம் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் டிரெய்லர் கூட இணையத்தில் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது படம் அதை விடவும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் படத்தின் லியானார்டோவுக்கு ஜோடியாக செவ்விந்திய இனத்தைச் சேர்ந்த பெண் நடித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு டேவி கிரென் என்பவர் அதே பெயரில் ஒரு நாவல் எழுதினார். அதை மையப்படுத்தியே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web