ரஜினியின் படங்கள் போல இருக்கும் "கிங்டம்" : விஜய் தேவரகொண்டா..!
Jul 30, 2025, 08:05 IST

கிங்டம் திரைப்படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அப்படத்தின் கதாநாயகனான விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஜெர்சி படத்தின் இயக்குநர் கூறிய இந்த படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்திருந்தது எனக் கூறினார். இந்த படத்தில் இலங்கை, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை எடுத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கிங்டம் திரைப்படம் ரஜினி படங்கள் போல இருக்கும் எனவும், தமிழ் மக்கள் தன் படத்திற்குத் துணை நிற்பார்கள் என நம்புவதாகவும் விஜய் தேவரகொண்டா தெரிவித்தார்.