கிங்ஸ்டன் பட்ஜெட் 20 கோடி.. ஆனா வசூல்..?

ஜிவி பிரகாஷ் குமாரின் 25வது படம் கிங்ஸ்டன்..இப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமின்றி இப்படம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டிருந்ததால், இது டெக்னிக்கல் ரீதியாகவும் பேசும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் திரைக்கதை சொதப்பியதால் கிங்ஸ்டன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியை சந்தித்துள்ளது.
கிங்ஸ்டன் திரைப்படம் வெளியான முதல் நாளில் 90 லட்சம் ரூபாய் வசூலித்தது. ஆனால் அதன் பின்னர் பெரியளவில் சோபிக்காததால் இப்படம் வெறும் ரூ.4.58 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதன் பட்ஜெட் மட்டுமே ரூ.20 கோடி ஆகும். அதில் பாதிகூட இப்படம் வசூலிக்கவில்லை. இந்த வாரம் 10 படங்கள் தியேட்டரில் புதிதாக ரிலீஸ் ஆகி உள்ளதால், கிங்ஸ்டன் படத்தை பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து தூக்கிவிட்டனர். இதனால் இப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக மாறி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
அடுத்ததாக ஜி.வி. பிரகாஷ் குமாரின் 'இடிமுழக்கம்' படமும் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத இந்த படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். படத்தின் கதை குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஜி.வி. பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். கிராமப்புற பின்னணியில் உருவாகும் இந்த படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்கிறார்.