ஜெமினிக்கு ஆசைப்பட்டு பாபாவை கோட்டைவிட்ட கிரண்
                                    
                                ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை என்று காலம்சென்ற கடைசியில் புலம்பி தவித்துள்ளார் நடிகர் கிரண்.
சரண் இயக்கத்தில் வெளியான ‘ஜெமினி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். அவருடைய அறிமுகம் கோலிவுட் சினிமாவையே கவனமீர்த்தது. தமிழில் நிச்சயம் மிகப்பெரிய இடத்துக்கு செல்வார் என்று கணிக்கப்பட்டது.
ஆனால் திரைப்படங்களை தேர்வு செய்ய தெரியாமலும், இந்தி பட வாய்ப்புக்காக காத்திருந்தும் தமிழில் உருவான ஒரு நல்ல எதிர்காலத்தை அவர் வீணடித்து விட்டார். இந்இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் கிரண் பதிவிட்டுள்ளார்.
அதில் பாபா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது ஜெமினி படத்தில் நடித்து வந்ததால், வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அதனால் பாபா படத்தை தவறவிட்டுவிட்டேன் என்று கிரண் தெரிவித்துள்ளார். இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 - cini express.jpg)