கோடிக்கணக்கில் சம்பளம் தருவதாக கூறியும் பாலாவை ஓடவிட்ட இளம் நடிகை..!!

 
bala

தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா. பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இவருடன் பணியாற்றுவதற்கு பல நடிகர்கள் நீ, நான் என்று போட்டிப்போட்டுக் கொண்டு இருக்கின்றனர். அதேபோல தான் நடிகைகளும், பாலா படத்தில் நடித்தால் நிச்சயம் விருது கிடைக்கும் என்று அவருடன் பணியாற்றுவதற்கு பெரிதும் ஆர்வமுடன் இருப்பார்கள்.

ஆனால் ஒரேயொரு இளம் ஹீரோயின் மட்டும் பாலா படத்தில் தன்னால் நடிக்கவே முடியாது என்று தெளிவாக கூறிவிட்டார். அதாவது, வணங்கான் படத்தை பாலா துவங்கும்போது சூர்யா ஹீரோவாக நடித்து வந்தார். கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

ஆனால் பாலாவுடன் ஏற்பட்ட மறைமுக மோதல் காரணமாக சூர்யா அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். மேலும் படத்தை தயாரிப்பதில் இருந்தும் விலகிக் கொண்டார். எனினும் வணங்கான் படத்தில் அருண் விஜய்யை ஹீரோவாக போட்டு, அதற்கான ஷூட்டிங் பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது.

kriti shetty

முன்னதாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கீர்த்தி ஷெட்டி. அந்த படத்தில் இருந்து சூர்யா விலகியவுடனே தானும் விலகுவதாக அறிவித்துவிட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு ஏற்பட்ட அசவுகரியங்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் வணங்கான் படத்தை அருண் விஜய்யை வைத்து பாலா மீண்டும் துவங்கியுள்ளதால், கீர்த்தி ஷெட்டியை படக்குழு அணுகியுள்ளது. ஆனால் அவர் அந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாராம். எவ்வளவு கோடி சம்பளம் கொடுக்கிறோம் என்று சொல்லியும், தேதிகள் இல்லாததை காரணம் காட்டி படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இதனால் இயக்குநர் பாலா புதிய ஹீரோயினை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
 

From Around the web