சல்மான் கான், ராம்சரண், வெங்கடேஷ்- அசரடிக்கும் காம்போ..!!

’கிஸி கி பாய் கிஸி கி ஜான்” என்ற படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏண்டம்மா’ என்கிற பாடலில் சல்மான் கானுடன் தெலுங்கு நடிகர்களான வெங்கடேஷ் மற்றும் ராம்சரண் இருவரும் சிறப்புத் தோற்றத்தில் வருகின்றனர்.
 
salman khan

தமிழில் 2016-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் ‘வீரம்’. இந்த படத்தில் அஜித் குமார், தமன்னா, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதே படம் தெலுங்கில் 2017-ம் ஆண்டு கட்டமராயுடு என்கிற பெயரில் வெளியானது. பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது வீரம் படம் இந்தியில் கிஸி கி பாய் கிஸி கி ஜான் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் சல்மான் கான், பூஜா ஹெக்டே, தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், சித்தார்த் நிகம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 21-ம் தேதி இந்த படம் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. முதற்கட்டமாக அந்த படத்தில் இடம்பெற்றுள்ள ’ஏண்டம்மா’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இதில் சல்மான் கான், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் கெட்ட ஆட்டம் போட்டுள்ளனர்.

தமிழ்நாட்டு ஸ்டைலில் வேட்டிக் கட்டிக்கொண்டு தெலுங்கு பாட்டுக்கு ஆடுவது போல பாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.  மேலும் இந்த பாடலில் தெலுங்கு நடிகர் ராம்சரண் சிறப்புத் தோற்றத்தில் வருவது ரசிகர்களை மேலும் உற்சாகமடையச் செய்துள்ளது.

From Around the web