நடிகர் விஜய்யின் தந்தை நடிக்கும் ‘கிழக்கு வாசல்’ சீரியல் முதல் ப்ரோமோ- இதோ..!!

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘கிழக்கு வாசல்’ தொடரின் முதல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
 
kizhakku vaasal

நடிகை ராதிகா சரத்குமாரின் ராடன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், சின்னத்திரை நிகழ்ச்சித் தயாரிப்புகளில் முன்னணியில் உள்ளது. சன் தொலைக்காட்சிக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியுள்ள இந்நிறுவனம், முதன்முறையாக விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

அவ்வாறு அந்நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் சீரியல் கிழக்கு வாசல் சீரியைல் ரேஷ்மா முரளிதரண், வெங்கட் ரெங்கநாதன், காயத்ரி கிருஷ்ணன், சிந்து ஷ்யாம், தினேஷ் கோபால்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சீரியலுக்கான கதை குரு சம்பத் குமார் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.

தற்போது சீரியலின் ப்ரோமோ வீடியோ வெளியானதை அடுத்து, இப்போது இந்த சீரியலை பார்க்க பலரும் ஆர்வமுடன் உள்ளனர். சீரியல் உலகின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த வேணு அரவிந்த் கிழக்கு வாசல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

From Around the web