ஜெய் பீம் படத்துக்கு கமல்ஹாசன் புகழாரம்- கொண்டாடும் கோலிவுட் சினிமா..!

 
ஜெய் பீம்

சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ படத்தை பார்த்த கமல்ஹாசன் உள்ளிட்ட கோலிவுட் சினிமாவின் பிரபலங்கள் பலர், படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கூட்டத்தில் ஒருத்தன் படம் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் தா. செ. ஞானவேல். இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஜெய் பீம்’. 

நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ள இப்படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. நடிகர் சூர்யாவுக்கு கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நீங்கள் வகுத்த பாதை… விதை நீங்க போட்டது! உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி என்று கூறியுள்ளார்.

அதேபோல, இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில், “அவசியமானதை அவசியமான நேரத்தில் தயங்காமல் முன்னெடுத்து நகரும் சூர்யா சார் அவர்களுக்கு வாழ்த்துக்களும் ப்ரியமும். ஜெய்பீம் வெல்லட்டும். படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்” என்று பதிவிடுள்ளார்.

தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் ஜெய்பீம் தமிழ் சினிமாவில் ஒரு குறிஞ்சிமலர். சந்துரு, ராஜாகண்ணு, செங்கேணி, பெருமாள்சாமி, மைத்ரா, குருமூர்த்தி, வீராசாமி,மொசக்குட்டி, இருட்டப்பன், பச்சையம்மாள் இன்னும் மனதைவிட்டு அகலவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்று திரைத்துறையச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள், இயக்குநர்கள் என தொடர்ந்து ‘ஜெய் பீம்’ படத்துக்கு பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.

From Around the web