கோட்டா சீனிவாச ராவ் மறைவு… கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்..!

கோட்டா சீனிவாச ராவ் இறந்த செய்தி வெளியானதுடன், ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லம், திரையுலகத்தின் முக்கிய பிரமுகர்களின் வருகையால் அஞ்சலித் தளமாக மாறியது. குறிப்பாக, நடிகர் பிரகாஷ் ராஜ், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு,பவன் கல்யாண் மற்றும் சிரஞ்சீவி உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
அதுமட்டுமல்லாது, தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் திகழ்ந்த சத்யராஜ், தனது இரங்கலை வீடியோ மூலமாக வெளியிட்டுள்ளார். அதில் அவர், "எனது நண்பரான கோட்டா சீனிவாச ராவ் இறந்தது மிகவும் வேதனையான செய்தி. அவர் ஒரு அற்புதமான நடிகர் மட்டுமல்ல, ஒரு அற்புதமான மனிதர். திரையில் அவர் செய்யும் ஒவ்வொரு வேடமும் இயல்பான உணர்வுகளால் நிரம்பி இருந்தது. அவரது நடிப்பை இன்றைய தலைமுறையினர் கற்றுக்கொள்ள வேண்டும்." என்றார்.
கோட்டா சீனிவாச ராவ் அவர்களின் மறைவு, தமிழ் திரையுலகத்திற்கே பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது நடிப்பு, கலைஞனாக காட்டிய திறமை மற்றும் பண்பு இவை அனைத்தும் ரசிகர்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.