கையில் இருந்த மொத்த பணத்தையும் பாவா லக்ஷ்மனனுக்கு வழங்கிய பிரபலம்..!!

தன் வங்கிக் கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் பாவா லக்ஷ்மனனின் சிகிச்சைக்காக வழங்கிவிட்டதாக பிரபல நடிகர் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
bava lakshmanan

ஆனந்தம் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் தோன்றி, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாவா லக்ஷ்மனன். அதற்கு பிறகு பல்வேறு படங்களில் வடிவேலுடன் இணைந்து காமெடிக் காட்சிகளில் நடித்துள்ளார்.

தற்போது பட வாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடி வரும் பாவா லக்ஷ்மனனுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு தீவிரமடைந்தது. இதனால் அவருடைய கால் கட்டை விரல் அக்கற்றப்பட்டு உள்ளது. மேலும் சில இணை நோய்கள் பாதிப்பும் அவருக்கு உள்ளது. 

தொடர் உடல்நிலை பாதிப்பு காரணமாக பாவா லக்ஷ்மனன் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் உதவி வருகின்றனர்.

A post shared by Bj Bala (@bjbala_kpy)

இந்நிலையில் விஜய் டிவி பிரபலம் பாலா மருத்துவமனையில் இருந்து பாவா லக்ஷ்மனனை சந்தித்தார். அவரிடம் தன்னிடம் இருந்து ரூ. 30 ஆயிரம் பணத்தை கொடுத்து உதவி செய்தார். ரூ. 1 லட்சம் கொடுக்கலாம் என்று இருந்தேன். ஆனால் என் கணக்கில் இவ்வளவு தான் இருந்தது. தப்பா நினைக்க வேண்டாம் என்று பாலா அவரிடம் கேட்டுக்கொண்டார்.

நடிகர் பாலாவின் இந்த செயல் சமூகவலைதளங்களில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. நடிகர் பாவா லக்ஷ்மனன் சீக்கரம் குணமடைந்து விட வேண்டும் என்று பலரும் கமெண்டு செய்து வருகின்றனர். 


 

From Around the web