பிரபல நடிகரின் வாரிசு காதல் டார்ச்சர்..? பொங்கி எழுந்த க்ரித்தி ஷெட்டி..!!
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘உபென்னா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் க்ரித்தி ஷெட்டி. கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழ் மொழியை மிகவும் சரளமாக பேச தெரிந்தவர். தன்னுடைய தாயார் தமிழ்நாடு மாவட்டம் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் என்று பல நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கில் பிரபலமாக இருந்தாலும், பையோலிங்குவல் முறையில் தயாரான 2 தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘தி வாரியர்’, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கஸ்டடி’ போன்ற படங்களில் க்ரித்தி நடித்துள்ளார். இதன்மூலம் அவருக்கு தமிழ்நாட்டிலும் கணிசமாக ரசிகர்கள் உள்ளனர்.
தெலுங்கு சினிமாவின் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரின் மகன், க்ரித்தி ஷெட்டிக்கு லவ் டார்ச்சர் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியான. அவர் எந்த இடத்துக்கு ஷூட்டிங் சென்றாலும், அந்த நபர் அங்கு வந்து க்ரித்திக்கு காதல் தொந்தரவு கொடுத்து வருவதாக பல நாட்களாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இந்த தகவலை முற்றிலுமாக மறுத்து க்ரித்தி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது முற்றிலும் பொய்யான தகவல். இப்படி ஒரு செய்தியை முதலில் கண்டுகொள்ளாமல் தான் விட்டுவிட்டேன், ஆனால் இது எல்லைமீறி செல்கிறது என்று தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேல்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜீனி’ படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு க்ரித்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது அவர் நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.