கைக்கு எட்டாத சூர்யா; கைக்குள் வந்த கார்த்தி- கீர்த்தி ஷெட்டி மகிழ்ச்சி..!!

வணங்கான் படத்தில் சூர்யாவுடன் நடிக்க வேண்டிய வாய்ப்பு நிறைவேறாமல் போன நிலையில், அவருடைய தம்பி கார்த்தியுடன் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்து வருகிறார்.
 
krithi shetty

தெலுங்கில் ‘உபென்னா’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. அதை தொடர்ந்து  தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாக மாறினார். இதன்மூலம் அவர் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

லிங்குசாமி இயக்கத்தில் உருவான ‘வாரியர்’ படம் மூலம் தமிழிலும் இவர் நடித்துள்ளார். இதையடுத்து பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி வந்த ’வணங்கான்’ படத்தில் கீர்த்தி ஷெட்டி நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகியதை அடுத்து, கீர்த்தி ஷெட்டியும் படத்தில் இருந்து விலகினார்.

இதனால் கீர்த்திக்கு சூர்யாவோடு இணைந்து நடிக்க முடியாமல் போய்விட்டது.  ஆனால் நலன் குமாரசாமி இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு சத்தமேயில்லாமல் நடந்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். 

மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘கஸ்டடி’. நாக சைத்தன்யா கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். அடுத்ததாக ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’ படத்திலும் அவர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

From Around the web