குவியும் பாராட்டுக்கள்..! ராகவா லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல் ! 

 
1

நடன கலைஞரும் , இயக்குனரும் , நடிகரும் என அனைத்து பரிமாணங்களிலும் கலக்க கூடியவர் ராகவா லாரன்ஸ் ஆவார். இவர் பொதுவாகவே ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார். அவ்வாறே சமீபத்தில் மாற்றம் எனும் அறக்கட்டளையையும் கூட தொடங்கியிருந்தார்.

இந்நிலையில், மாற்றுத்திறனாளி மாணவியான ஸ்வேதா, தனது படிப்பிற்கு உதவுமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ராகவா மாஸ்டர் சார் நீங்க எங்களை போன்று இருப்பவர்களுக்கு உதவி செய்வதை பார்த்து இருக்கிறேன். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவி, எனக்கு படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று ஆசை. ஆனால், எங்கள் அம்மாவால் படிக்கவைக்க முடியாது நீங்க உதவி செய்வீர்களா என கேட்டு இருந்தார்.

சமீபத்தில் ஊனமுற்ற சிறுமி ஒருவர் உதவி கோரி வீடியோ பதிவிட்டிருந்த நிலையில் குறித்த சிறுமிக்கு உதவி செய்துள்ளார். அந்த சிறுமியை நேரில் அழைத்து அவருக்கு பாடசாலை செல்வதற்கு ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்ததுடன் அவரது சிகிச்சை செலவையும் ஏற்றுள்ளார். 

  

From Around the web