குவியும் பாராட்டு..! மருமகளுக்காக நெப்போலியன் செய்த செயல்..!

நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்காக சிகிச்சை தேடி பல இடங்களுக்கு அலைந்திருந்தார்.
அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் மயோபதி முறையில் மருத்துவம் பார்க்கும் செய்தி கேட்டு அங்கு தன்னுடைய மகனுக்கு சிகிச்சை செய்து வந்தார். ஆனால் ஆரம்பத்தில் இதற்கு சிகிச்சை செய்திருந்தால் இதைவிட சிறப்பாக பலன் கிடைத்திருக்கும் என்று அதற்கு பிறகு தான் தெரியவந்தது. அதுபோல நெப்போலியன் குடும்பத்தினர் திருநெல்வேலியில் மருத்துவம் பார்ப்பதை தெரிந்து கொண்ட பல மக்கள் அங்கு மருத்துவம் பார்க்க குவிய தொடங்கிவிட்டனர்.
இதனால் தன்னுடைய சொந்த செலவிலேயே மயோபதி மருத்துவமனையை தொடங்கி இப்ப வரைக்கும் நிர்வகித்து வருகிறார். இந்த மருத்துவமனையில் பல்வேறு நாடுகளில் இருந்தும் குழந்தைகள் வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நெப்போலியனின் மூத்த மகன் தனுசுக்கு திருமணம் செய்ய போகும் செய்தி வெளியானது.
அதற்குப் பிறகு இணையத்தில் நெப்போலியன் குடும்ப செய்திதான் பெரிய பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நெப்போலியன் தன்னுடைய மகனுக்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிட்டார் என்று சிலர் வசைப்பாடி வந்தனர். ஒரு சிலர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நெப்போலியன் மகனால் திருமண வாழ்க்கையில் ஈடுபட முடியாது, எதற்காக ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கிறார்கள் என்றும் பேசிக் கொண்டிருந்தனர்.
இதற்கெல்லாம் மனம் வருந்தி நெப்போலியனும் அவருடைய மருமகளும் பேசிய பேட்டியும் இணையத்தில் வைரல் ஆனது. அதுபோல நெப்போலியன் தன்னுடைய மருமகள் குறித்து அவருடைய எங்கேஜ்மெண்டில் பேசும்போது, "எங்க மருமகள் தான் எங்க குலசாமி.. எங்க குடும்பத்தை வாழ வைக்க வந்த சாமி" என்று கண்கலங்க பேசியிருந்தார். பிறகு நெப்போலியன் தன்னுடைய மகனுக்கு ஜப்பானில் கடந்த நவம்பர் மாதம் திருமணத்தை நடத்தி முடித்து இருந்தார். திருமணத்தின் போது நெப்போலியன் கண்கலங்கிய புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் மூன்று மாதங்களாக நெப்போலியன் குடும்பத்தினர் ஜப்பானிலேயே இருந்து விட்டு இப்போது அமெரிக்காவிற்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் நெப்போலியன் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் தான் மலேசியாவில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதோடு, "அன்புள்ள நண்பர்களே தாய்லாந்துக்கு நீண்ட பயணம் மேற்கொள்ள மலேசியாவில் பினாங்கு முனீஸ்வரன் கோவிலில் புதுமண தம்பதிகள் தனுஷ் மற்றும் அக்ஷயாவிற்கு பிரார்த்தனை செய்ய நாங்கள் சென்றோம்" என்று குறிப்பிட்டு இருக்கிறார். அந்த கோவிலில் நெப்போலியன், அவருடைய மனைவி மற்றும் மருமகளுக்கு மாலை போட்டு மரியாதை செலுத்தி இருக்கிறார்கள்.