பாண்டியன் வீட்டில் க்ளோபரம் ஆன பிறகு அரசியை அழைத்துக்கொண்டு வர தயாராகிறான் குமார்..!

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட்டில் அரசி எங்கே போயிருக்கிறாள் என தெரியாமல் மொத்த குடும்பமும் குழப்பத்தில் இருக்கிறது. கதிர் இதுக்கு மேலயும் சும்மா இருக்க கூடாது. நான் போய் அந்த குமார் பத்தி கேட்டுட்டு வர்றேன் என்கிறான். அவன்தான் அங்க இல்லையே என சொல்ல, கேட்குற விதத்துல கேட்டா எங்க இருக்கான்னு சொல்வாங்க என கூறுகிறான். இதனையடுத்து கதிர் கிளம்பி போக செந்திலும் கூடவே செல்கின்றனர்.
அப்போது மயில் தம்பிகளை போக வேணாம் சொல்லுங்க. அரசி காணாமல் போன விஷயம் இன்னும் வெளிய தெரியலை. இவுங்களே போய் சொல்லிடுவாங்க போல என்கிறாள். அதற்கு சரவணன், தம்பிங்க பண்றது எந்த தப்பும் இல்லை. அரசி எங்க இருக்கான்னு தெரியனும் என சொல்லி கிளம்பி போகிறான். அங்கு போய் குமார் அரசியை கடத்தி விட்டதாக கதிர், செந்தில் சத்தம் போடுகின்றனர். சக்திவேல் ஒன்றுமே தெரியாதது போல் நடிக்கிறான்.
சத்தம் கேட்டு முத்துவேல் உள்ளிட்ட அனைவரும் அங்கு வருகின்றனர். அப்போது வடிவு, மாரி இருவரும் அவன் அந்த மாதிரி பண்ணிருக்க மாட்டான் என சொல்கின்றனர். பாட்டியும் பிள்ளை எங்கன்னு தேடுங்கப்பா. கல்யாணத்துக்கு வேற நேரம் ஆகிருச்சு. நேரத்தை வீணாக்காம அரசிய் எங்க இருக்கன்னு பாருங்க என சொல்கிறார். சக்திவேல் திமிராக என் அண்ணன் குமாருக்கு பணக்கார வீட்ல பொண்ணு பார்த்து இருக்காரு. அப்படி இருக்கும் போது ஓடுகாலி பொண்ணை என் பையன் ஏன் கடத்த போறான் என சொல்கிறான்.
அப்போது முத்துவேல் எல்லாரும் சொல்றாங்கள்ள. என் வீட்டுல வந்து யாரும் கத்த வேண்டியது இல்லை. உங்க வீட்டு பொண்ணு காணோம்னா போய் போலீஸ்ல புகார் கொடுங்க. இங்க வந்து பிரச்சனை பண்ணக்கூடாது என சொல்லி அனுப்பி வைக்கிறான். கதிர், செந்தில், சரவணன் கடுப்பாகி வீட்டுக்கு வருகின்றனர். அங்கு நடந்த விஷயத்தை சொல்ல, சக்திவேல் சித்தப்பா பொய் சொல்ல வாய்ப்பு இருக்கு. மத்த யாரும் உண்மையை மறைக்க மாட்டாங்க என்கிறாள் ராஜி.
அப்போது பொண்ணு அழைப்பதற்காக மாப்பிளை வீட்டில் இருந்து அனைவரும் வந்து கொண்டிருப்பதாக பழனிவேலுக்கு போன் வருகிறது. இதனால் அவன் பதட்டமடைந்து பாண்டியனிடம் விஷயத்தை சொல்கிறான். இதனையடுத்து என்ன செய்வது என புரியாமல் குழம்புகின்றனர். கோமதி கதறி அழ ஆரம்பிக்கிறாள். அந்த நேரத்தில் கரெக்டாக மாப்பிள்ளை உட்பட அனைவரும் அங்கு வந்து விடுகின்றனர். பாண்டியன், கோமதி உள்ளிட்ட அனைவரும் வெளியே போய் அவர்களை அழைத்து வீட்டுக்குள் வருகின்றனர்.
அப்போது மாப்பிள்ளையின் அம்மா, இவனுக்கு ராஜியை கையோட மண்டபத்துக்கு அழைச்சுட்டு வரணுமாம். என்ன நீங்க எல்லாம் கிளம்பாம இருக்கீங்க. பொண்ணாவது கிளம்பிருச்சா, இல்லையா? என கேட்கிறாள். அங்கிருக்கும் ஒரு ஆள் பொண்ணு காணாம போயிருச்சு அப்படின்ற உண்மையை இன்னும் எவ்வளவு நேரத்துக்கு மறைக்க போறீங்க என்கிறாள். இதனால் மாப்பிள்ளை கடுமையாக அதிர்ச்சியில் உறைகிறான்.
இதனிடையில் பாண்டியன் வீட்டுக்கு முன்பாக இருக்கும் ஒருவன் குமாருக்கு போன் பண்ணி மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துள்ள விஷயத்தை சொல்கிறான். உடனே அவனும் அரசியை அழைத்துக்கொண்டு வருவதற்கு தயாராகிறான். இப்படியாக இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் எபிசோட் நிறைவடைந்தது.