அரசியை கடத்திய குமார்.. சிக்கலில் சுகன்யா... சுகன்யாவிடம் கோமதி கேட்ட கேள்வி.!

 
1

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நாடகத்தில் ஹாலில் அனைவரும் இருப்பதால், யாருக்கும் தெரியாமல் கொல்லைபுறம் வழியாக போகலாம் என ஐடியா கொடுக்கிறாள் சுகன்யா. இதனையடுத்து அரசியை அவள் அழைத்து வர, இடையில் கோமதி பார்த்தது நிப்பாட்டி பேசுகிறாள். இன்னும் என்னம்மா தூங்கமா இருக்க? நாளைக்கு காலைல சீக்கிரம் எந்திரிக்கனும், போய் தூங்குமா என்கிறாள்.

அவள் போனதும் அரசியை அழைத்து வருகிறாள் சுகன்யா. வழியில் யாரும் இருக்கிறார்களா என பார்த்து பார்த்து அனுப்பி வைக்கிறாள். அதன்பின்னர் சுகன்யா மறுபடியும் வீட்டுக்குள் வரும் போது, வாசலில் பழனி நின்று கல்யாணத்துக்கு வந்தவர்களிடம் பேசி கொண்டிருக்கிறான். சுகன்யாவை பார்த்ததும் இந்த நேரத்துல எங்க போயிட்டு வர என விசாரிக்கிறான். அவள் தண்ணீர் பிடிக்க போனதாக சொல்லி சமாளிக்கிறாள்.

இதனிடையில் குமாரை பார்க்கும் அரசி, என்னை ஏன் இவ்வளவு டார்ச்சர் பண்ற? உனக்கு என்ன வேணும். என்னை நம்ப வைச்சு ஏமாத்துனது நீதான் என சொல்கிறாள். அதற்கு அவன், உன்னை மன்னிப்பு கேட்க சொன்னா. என்னை திட்டிட்டு இருக்க. நீ பேசுறதை பார்த்தால் உனக்கு கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லை போல என சொல்கிறான். அதற்கு அரசி, நான் பண்ணது எல்லாம் தப்பு தான். மன்னிச்சுடு நான் போறேன் என்கிறாள்.

குமார் நில்லு என சொல்லி, என் எதிரி குடும்பத்துல நீ பிறந்தது பெரிய தப்பு என சொல்கிறான். அதற்கு அரசி, இப்போ என் குடும்பம் உங்களுக்கு எதிரா ஆகிருச்சா. கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்னன்ன சொன்னீங்க. நம்ம அப்பா காலத்து பிரச்சனை. இதெல்லாம் சரியாகனும். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தால், நம்ம குடும்பம் ஒன்னு சேரும் தான சொன்னீங்க என கேட்கிறாள். ஆமாம் சொன்னேன். அதெல்லாம் உன் குடும்பத்தை பழிவாங்க சொன்னது என்கிறான்.
 

உடனே அரசி நீங்க அம்பாசமுத்திரம் வந்தப்பவே உங்களோட உண்மையான முகம் என்னன்னு தெரிஞ்சுடுச்சு என சொல்கிறாள். அதற்கு அவன் அங்க வைச்சு மொத்த குடும்பமும் சேர்ந்து என்னை கொலை பண்ண பார்த்தீங்கள்ள என கேட்கிறான் குமார். அரசி அதற்கும் சேர்த்து நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். நான் இப்போ வீட்ல இல்லன்னு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆகிடும். நான் கிளம்புறேன் என சொல்கிறாள்.

அவள் சொல்வதை கேட்டு கைத்தட்டி சிரிக்கும் குமார், உன்னை இங்க கஷ்டப்பட்டு வர வைச்சது உடனே அனுப்புறதுக்கா. என் வலைல நீ சிக்கிட்ட என சொல்கிறான். இதனைக்கேட்டு அதிர்ச்சியடையும் அரசி அங்கிருந்து தப்பித்து ஓட பார்க்கிறாள். வழியில் சிலரை பார்த்து உதவி கேட்கிறாள். அவர்களை பார்த்தும் குமார் சிரிக்கிறான். அங்கு நிற்பவர்களும் குமாரின் ஆட்கள். எல்லாரும் சேர்ந்து அரசியை காரில் கடத்தி செல்கின்றனர்.

இதனிடையில் அரசி வந்துடுவாளா என்ற மரண பயத்திலே இருக்கிறாள் சுகன்யா. இப்போ வரலன்னா நான் அனுப்புன மாதிரி ஆகிடுமே என யோசித்து குமாருக்கு போன் பண்ணுகிறாள். ஆனால் அவன் எடுக்கவில்லை. அரசி போனும் வீட்டில் இருக்கிறது. இதனால் என்ன செய்வது என தெரியாமல் பயத்திலும், குழப்பத்திலும் இருக்கிறாள் சுகன்யா.

அப்போது அரசியை தேடி கோமதி வர, அவள் தூங்கி விட்டதாக சொல்லி சமாளிக்கிறாள் சுகன்யா. அதனை தொடர்ந்து மீனா, ராஜி உள்ளிட்டோரும் அரசியை கேட்டு வருகின்றனர். அவர்களையும் சமாளித்து அனுப்புகிறாள் சுகன்யா. இப்படியாக இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.

From Around the web