குமாரின் அடுத்த மாஸ்டர் பிளான்.. பயத்தில் அரசி.. குள்ளநரி வேஷம் போடும் சுகன்யா..!   

 
1

 இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட்டில் கல்யாணத்துக்கு முந்தைய நாள் நலுங்கு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அப்போது அரசிக்கு மருதாணி வைத்து கொண்டிருக்கும் சமயத்தில் குமார் போன் பண்ணி, உன் வீட்ல உள்ள எல்லாருக்கும் நம்ம போட்டோவை அனுப்ப போறேன். மாப்பிள்ளை நம்பரும் என்கிட்ட இருக்கு. என்னை தவிர வேற யாரையும் நீ கல்யாணம் பண்ணிக்க கூடாது என மிரட்டுகிறான்.

இதனால் அரசி மரண பயம் அடைகிறாள். இதனிடையில் லாக்கரில் இருக்கும் மருமகள்களின் நகைகளை எல்லாம் எடுத்துட்டு வந்து கொடுக்கிறாள் கோமதி. நகை பையை பார்த்ததும் பயத்தில் உறைகிறாள் தங்கமயில். ராஜியும், மீனாவும் என்ன சொல்வது என தெரியாமல் குழம்புகின்றனர். கோமதி அனைவருடைய நகையையும் பிரித்து தருவாதாக சொல்ல, நாங்களே எடுத்துக்கிறோம் அத்தை என சமாளிக்கிறாள் ராஜி.

அப்போது மயிலிடம் உன்னோட பெரிய ஆரம் இருக்குல. அதை போட்டுக்கோ சூப்பரா இருக்கும் என சொல்கிறாள் கோமதி. அந்த ஆரம் ஏற்கனவே கருத்து போயிருப்பதால், கவரிங் நகை என்பது தெரிந்து விடுமே என பயப்படுகிறாள் மயில். கோமதி போனதும் நீங்க பதறாதீங்க அக்கா. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம் என சொல்கிறாள் மீனா.

அப்போது மயில், அந்த ஆரம் ஏற்கனவே கருத்து போயிருச்சு மீனா. இப்போ அதையே அத்தை போட சொல்றங்க. அதை போட்டா மாட்டிக்குவேன் என சொல்கிறாள். அதற்கு மீனா அந்த ஆரம் உங்க டிரெஸ்க்கு மேட்ச்சா இல்லைன்னு சொல்லிக்கலாம். நீங்க வேற ஏதாவது நகையை போடுங்க அக்கா. இப்போ இந்த நகையை எல்லாம் எடுத்துட்டு போய் உள்ள வைச்சுடுங்க என சொல்கிறாள்.

அவள் போனதும் செந்தில் அங்கு வர, மீனா ரெட் கலர் சாரியில் அவனும் சட்டை போட்டு இருக்கான். ராஜியிடம் எப்படி இருக்கு என கேட்கிறாள் மீனா. அவளும் நல்லா இருக்கு என சொல்ல, கதிரும் உன் டிரெஸ் கலர்ல சட்டை போடுவான்ல. நம்ம எல்லாரும் சேர்ந்து போட்டோ எடுக்கலாம் என சொல்கிறாள்.அதற்கு ராஜி, அவன் நான் எடுத்துட்டு வந்த சட்டையை போட மாட்டானாம். ரொம்ப திமிரு பிடிச்சவன் அக்கா. அவன் சொல்ற எல்லாத்தையும் நம்ம கேட்கனும் என கதிரை திட்டுகிறாள்.

இதையெல்லாம் வெளியில் இருந்து கேட்கும் அவன் ஷாக் ஆகிறான். அதனை தொடர்ந்து ராஜி வெளியில் வந்ததும் என் முன்னாடி தான் மரியாதை இல்லாம பேசுவ. மத்தவங்க கிட்டயாவது என்னை பத்தி மரியாதையா பேசலாம்ல என கேட்கிறான். ராஜி அதெல்லாம் பேச முடியாது என சொல்கிறான். அதன்பின்னர் நலங்கு பங்ஷனுக்காக மாப்பிள்ளை வீட்டில் இருந்து அனைவரும் வருகின்றனர். மாப்பிளை, பெண்ணை உட்கார வைத்து நலங்கு வைக்க ஆரம்பிக்கின்றனர்.

அப்போது மாப்பிள்ளை அரசியிடம் நீ தேவதை மாதிரி இருக்க என சொல்கிறான். அங்கு ராஜி எடுத்துட்டு வந்த சட்டையை போட்டு வந்து இன்பதிர்ச்சி கொடுக்கிறான் கதிர். சரவணன், தங்கமயில் மட்டும் வேற வேற கலரில் சட்டை போட்டு இருக்கின்றனர். இதனையடுத்து கலகலப்பாக நலங்கு பங்ஷன் நடக்க, சுகன்யா நம்பருக்கு கால் வருகிறது.

அவள் போனை எடுத்து பார்க்க, குமார் கால் பண்ணி இருக்கிறான். இவன் எதுக்காக இப்போ போன் பண்றான் என பதருகிறாள் சுகன்யா. அவளை பார்த்து அரசியும் அதிர்ச்சியில் உறைகிறாள். இப்படியாக இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.

From Around the web