புதிய வைரஸ் காய்ச்சல் பாதிப்பு- தீவிர சிகிச்சையில் நடிகை குஷ்பூ..!!

புதுவித வைரஸ் தொற்று காரணமாக காய்ச்சல் வந்துள்ளதாகவும், அதற்குரிய சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
 
kushboo

90-களில் கதாநாயகியாக நடித்து வந்த குஷ்பூ, சினிமா வாய்ப்பு குறைந்ததும் இயக்குநர் சுந்தர். சியை திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து அரசியலில் கால்பதித்த அவர், முன்னதாக தி.மு.க கட்சியில் இணைந்தார். பிறகு காங்கிரஸுக்கு வந்த அவர், அண்மைக் காலமாக பா.ஜ.க-வில் ஐக்கியமாகியுள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பா.ஜ.அ ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூவை க்ளமிறக்கியது. அன் அந்த தேர்தலில் தி.மு.க வேட்பாளர் எழிலன் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் குஷ்பூவுக்கு தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, பதவி வ்ழங்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட வேலைகள் காரணமாக ஹைதராபாத் சென்றிருந்த போது, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பரிசோதித்த போது, குஷ்பூவுக்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு அடினோ வைரஸ் என்கிற புதிய வகை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை குஷ்பு. Flu காய்ச்சலின் எந்த அறிகுறிகளையும் சாதாரணமாகி நினைக்காதீர்கள். உங்கள் உடலில் அறிகுறி தெரியும்போது உஷாராகிவிடுங்கள். எனக்கு ஏற்பட்டுள்ள அடினோ வைரஸ் பாதிப்பால் நான் அவதி அடைந்து வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

From Around the web