2023 கேன்ஸ் திரைப்பட விழாவில் காஞ்சிபுரம் புடவையில் கலக்கிய குஷ்பு..!!
 

பிரமாண்டமாக நடைபெற்று 76-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு காஞ்சிபுரம் சேலையில் வருகை தந்தை நடிகை குஷ்புவின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
khushboo

உலகளவில் பிரபலமான திரைப்பட விழாக்களில் மிகவும் முதன்மையானது கேன்ஸ். நடப்பாண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா அண்மையில் துவங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் முருகன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் அவர்களுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், மாதவன், நயன்தாரா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கெடுத்துள்ளனர். தொடர்ந்து 21-வது ஆண்டாக ஐஸ்வர்யா ராய் பச்சன் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கெடுத்து வருகிறார்.

நடப்பாண்டில் அவர் முதல் நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த உடை பலராலும் பாராட்டப்பட்டது. இம்முறை நடிகை குஷ்பு தமிழகத்தின் பாரம்பரிய ஆடைகளில் ஒன்றாக காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் விழாவுக்கு சென்றுள்ளார். அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

From Around the web