ரசிகர்கள் குஷி..!! சன் டிவியில் வரும் பொங்கலுக்கு நம்ம சூப்பர்ஸ்டார் படம் போட போறாங்க..!!  

 
1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. இந்த படம் தீபாவளிக்கு வெளியானது.  இந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். காலை 4 மணிக்கே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

தர்பார் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என நடிகர் பட்டாளமே அண்ணாத்த படத்தில் நடித்துள்ளது.  நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்து கதையில் சூப்பர்ஸ்டார் நடித்துள்ளதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே எழுந்தது. இது ரஜினிகாந்தின் 168-வது படமாகும்.

1

அண்ணன் மற்றும் தங்கை பாசத்தை மையமாக ‌எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து வருகிறது. இதுவரை 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

திரையரங்கை தொடர்ந்து ஓடிடி-யில் வெளிவந்த அண்ணாத்த படம், நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அண்ணாத்த திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யவுள்ளனர்.பொங்கலன்று மாலை 6.30 மணிக்கு அண்ணாத்த படம் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

1

வரும் ஜனவரி 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொங்கல் பண்டிகை தினத்தன்று மாலை 6.30 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான "அண்ணாத்த" மெகாஹிட் திரைப்படம் சன் டிவி-யில் ஒளிபரப்பாக இருக்கிறது. 



 

From Around the web