பண நெருக்கடியால் 9 வருடம் முடங்கிய லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா படம் !!

 
1

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அவருடைய ரசிகர்கள் செல்லமாக அழைப்பது உண்டு.2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 - ம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் நயன்தாரா நடித்த ஒரு படம் கடந்த 9ஆண்டுகளாக வெளியாகவில்லை என்றால் நம்ப முடிகிறதா ?ஆனால் அது தான் உண்மை. 

நயன்தாரா நடித்துள்ள "ஆரடுகுலா புல்லட்" என்ற தெலுங்கு படம் பண நெருக்கடியால் திரைக்கு வராமல் கடந்த 9 வருடங்களாக முடங்கி கிடக்கிறது. இந்த படத்தில் கதாநாயகனாக கோபிசந்த் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பை 2012-ல் தொடங்கினர். முழு படப்பிடிப்பையும் முடித்து அந்த வருடமே திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டனர்.ஆனால் படத்தின் இயக்குனர் பூபதி பாண்டியன் சில பிரச்சினைகளால் படத்தில் இருந்து விலகியதால் தாமதம் ஏற்பட்டது. 

பின்னர் கோபால் என்பவர் இயக்கினார். படத்தை முடித்து 2017-ல் தணிக்கை குழுவுக்கு அனுப்பி யூ/ஏ சான்றிதழ் பெற்றனர். அதன்பிறகும் பண நெருக்கடி உள்ளிட்ட சில பிரச்சினைகளால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த நிலையில் தற்போது பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதால் படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

From Around the web