சினிமா வாய்ப்புகள் வந்ததால் படிப்பையும் காதலையும் தொடர முடியவில்லை - லட்சுமி மேனன்..!

 
1

‘கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை லட்சுமி மேனன். வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார்.’நான் சிகப்பு மனிதன்’, ‘ஜிகர்தண்டா’, ‘கொம்பன்’ என இவர் நடித்தப் படங்கள் அடுத்தடுத்து இவருக்கு கைக்கொடுத்தாலும், நடிகர் விஷாலுடன் ஏற்பட்ட காதல் கிசுகிசு சினிமாவில் இவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்கிடையில் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டி இருந்ததால் சினிமாவிற்கு சில காலம் பிரேக் விட்டார். இப்போது சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார் லட்சுமி மேனன்.

இந்நிலையில், நடிகை லட்சுமி மேனன் தனது காதலன் குறித்து பகிர்ந்தார். அப்போது அவர் கூறுகையில்,
பள்ளியில் படிக்கும்போது ஒருவரிடம் காதலை சொன்னேன். சில நாட்கள் கழித்து அவர் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். அடிக்கடி நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டோம். குடும்பத்தினருக்கு தெரியாமல் இருக்க போர்வைக்குள் இருந்து கொண்டு பேசுவேன். சினிமா வாய்ப்புகள் வந்ததால் படிப்பையும், காதலையும் தொடர முடியவில்லை. அவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக கேள்விப்பட்டேன் என்றார்

தற்பொழுது லட்சுமி மேனன் ‘ஈரம்’ படத்தை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சப்தம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

From Around the web