பிக்பாஸ் சீசன் 5-யில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்..?
 

 
லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

விரைவில் துவங்கப்படவுள்ள பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பங்கேற்கவுள்ளதாக செய்தி வெளியானதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.

தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை 4 சீசன்கள் ஒளிப்பரப்பாகியுள்ளது. அவை அனைத்துமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

விரைவில் பிக்பாஸ் சீசன் 5 துவங்கப்படுகிறது. இதையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு ப்ரோமோக்களும் டிவியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.

புதிய சீசனில் பங்கேற்கும் பிரபலங்கள் என்கிற தகவல் தினந்தோறும் வெளியாகிய வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் புதியதாக இடம்பெற்றுள்ள பெயர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். அவருடைய பெயர் வெளியானதை தொடர்ந்து சமூகவலைதளங்களில் வைரலானது.
தற்போது இந்த செய்தி தொடர்பாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் பிக்பாஸ் போட்டியாளர் இல்லை. என்னுடைய பெயரை நீக்குங்கள் என்று கூறியுள்ளார். இதன்மூலம் பிக்பாஸில் அவர் பங்கேற்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் புதிய சீசனில் நடிகை ரம்யாகிருஷ்ணன், நடிகர் ஜான் விஜய், எம்.எஸ். பாஸ்கர், டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர், ஜி பி முத்து, ஷகிலாவின் மகள் மிலா, ‘குக் வித் கோமாளி’ புகழ் கனி, சுனிதா, மைனா நந்தினி, தொகுப்பாளர் ப்ரியங்கா ஆகியோர் பங்கேற்கவுள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது.

From Around the web