லால் சலாம் படத்தில் கபில் தேவ்..? ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்..!!

லால் சலாம் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் கபில் தேவ் உடன் இருக்கும் புகைப்படத்தை ரஜினிகாந்த் பகிர்ந்ததை அடுத்து, அவரும் அந்த படத்தில் இணைந்துள்ளதாக சமூகவலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
 
kapil dev

மூன்று மற்றும் வை ராஜா வை படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘லால் சலாம்’. இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் ஹீரோவாக நடிக்கின்றனர். ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். திருவண்ணாமலை சுற்றியுள்ள பகுதிகளில் இதற்கான ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில், தற்போது மும்பையில் லால் சலாம் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அங்கு ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மொய்தீன் பாய் எனவும், அவருக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுவிட்டது. இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் புதிய அப்டேட்டை நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

அதன்படி இந்த படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார். அவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், “ முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நாயகன் கபில் தேவ் உடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் ஒரு அற்புதமான மனிதர்” என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. தற்போது இந்த படத்தில் கபில் தேவ்வும் இணைந்துள்ளது மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 
 

From Around the web