டிவியில் ஒளிபரப்பாகும் லால் சலாம்..! எந்த சேனலில் தெரியுமா?
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்து கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான திரைப்படம் லால் சலாம்.
இவ்வாறு மிகப்பெரிய அளவில் பில்டப் கொடுத்து ரிலீஸ் ஆன லால் சலாம் திரைப்படம் சுமாரான திரைகளை காரணமாக படு தோல்வியை சந்தித்தது. ஆனால் அந்தப் படத்தின் தோல்விக்கு காரணம் அதன் ஹார்ட் டிஸ்க் தொலைந்து போனது தான் என்று கூறியிருந்தார் ஐஸ்வர்யா. இதனால் ஓடிடி ரிலீஷிலும் சிக்கல் ஏற்பட்டது.
அதற்கு காரணம் தொலைந்து போன ஹார்ட் டிஸ்க் மீண்டும் கிடைத்த பிறகு அந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் உறுதியாக கூறியுள்ளது. இதனால் நீண்ட நாட்களாகவே இந்த திரைப்படம் ஓடிடியில் வெளிவராமல் காணப்படுகிறது.
இந்த நிலையில், லால் சலாம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் முன்பே எதிர்வரும் டிசம்பர் 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஜீ சினிமா மற்றும் ஜீ டிவியில் இந்தி வெர்சனில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த படத்தின் தமிழ் வெர்ஷன் பற்றி என்னும் அறிவிப்புகள் வெளியாக வில்லை.