ஒடிடியில் வெளியாகும் லால் சலாம்..எப்போ எங்கே தெரியுமா ? 

 
1

ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த திரைப்படம் தான் லால் சலாம். நீண்ட நாட்கள் கழித்து ரஜினி ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அப்படிப்பட்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்தாண்டு திரையில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடர்ந்து இப்படம் OTT யில் எப்போது வெளியாகும் என கடந்த பல மாதங்களாக ரசிகர்கள் காத்துகொண்டு இருந்தனர்.

திரையில் இப்படத்தை பார்க்காத ரசிகர்கள் OTT யில் பார்த்துவிடலாம் என இருந்தார்கள். ஆனால் இப்படத்தின் OTT ரிலீஸ் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது லால் சலாம் OTT ரிலீஸ் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டது. விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் இப்படத்தில் நாயகர்களாக நடித்திருக்க மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் ரஜினி. அது தவிர இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க லைகா இப்படத்தை தயாரித்தது. இவ்வாறு இப்படத்தின் அறிவிப்பு வெளியான போது உச்சகட்ட எதிர்பார்ப்பில் இப்படம் இருந்தது.

குசேலன் என்ற திரைப்படத்திற்கு பிறகு ரஜினி இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். பொதுவாக அவ்வளவு எளிதாக ரஜினி ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார் என்ற ஒரு டாக் இருந்து வருகின்றது. அப்படி ரஜினியே இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதால் கண்டிப்பாக அந்த கதாபாத்திரம் தனித்துவமான ஒரு பாத்திரமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால் படமும் சரி, ரஜினி நடித்த கதாபாத்திரமும் சரி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறியது என்றுதான் விமர்சனங்கள் வந்தன. இருந்தாலும் படம் பார்த்த ஒரு சிலர் லால் சலாம் திரைப்படம் நன்றாக தான் இருக்கின்றது என்றனர். ரஜினி நடிப்பு சிறப்பாகவும், அவரின் கதாபாத்திரம் வித்யாசமாகவும் இருந்ததாக ரசிகர்கள் சிலர் கூறினார். எனவே இப்படம் OTT யில் வெளியானதும் பார்க்கலாம் என காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இதுவரை ஏமாற்றமே தான் மிஞ்சியது. லால் சலாம் OTT ரிலீஸ் குறித்து படக்குழு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எனவே OTT யில் இப்படத்தை பார்க்கலாம் என கடந்த பல மாதங்களாக எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. வருகின்ற ஜூன் 6 ஆம் தேதி லால் சலாம் திரைப்படம் பக்ரீத் ஸ்பெஷலாக OTT யில் ரிலீஸாகவுள்ளது. சன் நெக்ஸ்ட் என்ற OTT தளத்தில் லால் சலாம் திரைப்படம் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

1

From Around the web